Wednesday, April 29, 2009
இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை
Vimalkanth
வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக பல்லாயிரக்கான வன்னி மக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்
இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சென்ற இராணுவதினர் ஒலிபெருக்கி மூலம் உங்கள் பிள்ளைகள் ஒருநாள் விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்தாலும் தயவு செய்து முன்னரே பதிவு செய்து கொள்ளுங்கள்
உங்கள் பிள்ளைகளுக்கு எங்களால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது உங்கள் பிள்ளைகள் உங்களிடமிருந்து பிரிக்கமாட்டோம் பதிவு செய்யாமல் உங்களின் பிள்ளைகள் யாராவது விடுதலை புலிகளின் அமைப்பிலிருந்த்தாக எங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்க்ள்
இதை நம்பிய பொற்றோர் தங்களின் பிள்ளைகளை பதிவு செய்தார்கள் பதிவு செய்த பின் பிள்ளகளை பெற்றொருடன் விட்டுச்சென்ற இராணுவதினர் மறுநாள் காலை ஒரேநேரத்தில் அனைத்து முகாமுகளுக்கும் சென்ற இராணுவத்தினர் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என பதிவு செய்த ஆண்கள் பெண்கள் என 400ற்கும் மேற்பட்டவர்களை பலவந்தமாக ஏற்றி சென்றுள்ளனர்
இவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment