Sunday, April 12, 2009

பிரித்தானியாவில் வரலாறு காணாதா பேரணி: இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

விமல்காந்த், சென்னை.
பிரித்தானியாவில் வதியும் தமிழ் மக்களின் மூன்றில் இரண்டிற்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் இலண்டன் வீதிகளின் ஊடாக அணிவகுத்து உடனடி யுத்த நிறுத்தத்திற்கு வலியுறுத்தியும் தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் மாபெரும் ஆர்பாட்ட பேரணியை நடாத்தியுள்ளனர்



இலண்டன் தமிழ் இளையோர்களாலும், மாணவர்களாலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் ஆர்பாட்ட பேரணியும் பெருமளவு பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள் என இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
இலண்டன் எம்பார்க்மன்ட் என்ற பகுதியில் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பித்த பேரணி சுமார் இருமணித்தியாலங்களில் ஹட்பாக்க கோணரை சென்றடைந்தது. அங்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய தமிழ் பேரவை உறுப்பினர், தமிழ் இளையோர் அமைப்பினர் என பலர் உரையாற்றியிருந்தனர்

இப்பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள்:

"எமது தேவை தமிழீழமே!"

"போர் நிறுத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்து!"

"சிறிலங்கா அரசுக்கான உதவிகளை உடன் நிறுத்த வேண்டும்"

"பிரபாகரனே எங்கள் தலைவன்"

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் சென்றடைய வேண்டும்"

" பிரித்தானிய அரசே புலிகள் மீதான தடையை நீக்கு"

" புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள்"

"பொதுநலவாய நாடுகளில் இருந்து சிறிலங்காவை உடனடியாக நீக்கு"

"புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல; அவர்கள் ஒரு விடுதலை இயக்கம்"

"உலக வங்கியே சிறிலங்காவுக்கு பண உதவி செய்யாதே!"

"பிரித்தானியாவே சிறிலங்கா பொருட்களை வாங்கி, உன் கைகளில் இரத்தத்தை வாங்காதே!"

என கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்

No comments:

Post a Comment