வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் ''மக்கள் பாதுகாப்பு வலயம்'' மீது கடந்த 15 மணி நேரத்தில் 5,600 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இன்றைய எறிகணைத் தாக்குதல்களில் 200-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1400-க்கும் அதிகமான தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்
மக்கள் இடம்பெயர்ந்து வாழும் நெருக்கமான பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணி வரை 2,000 பல்குழல் வெடிகணைகள், 1,000 ஆட்டிலறி எறிகணைகள், 2,000 மோட்டார் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. ஒற்றைப் பனையடி, இரட்டைவாய்க்கால் ஆகிய பிதேசங்களில் வாழும் மக்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிறீலங்காப் படையினரின் அகோர தாக்குதல்களால் மக்கள் குடியிருப்புகள் எல்லாம் புகை மண்டலமாகவும், தரப்பாள்கள் எரிந்தும் நாசமாகியுள்ளன. பொதுமக்களின் உடலங்கள் ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றன

வலைஞர்மடத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் படையினரின் அகோர தாக்குதல்களால் வட்டுவாகல் பகுதிக்கு இடமபெயர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment