Tuesday, April 21, 2009

விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரணடையமாட்டார்கள், சர்வதேசம் தலையிட்டு நிரந்தர யுத்தநிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச ஊடகதிற்கு பேட்டி


தமிழீழ விடுதலைப்புலிகள் ஒருபோதும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையமாட்டார்கள், அப்படி ஒருசூழ்நிலை வந்துவிடவில்லை, விடுதலைப்புலிகள் தற்போதும் முழுநம்பிக்கையுடனும் தைரியத்துடனுமே போராடிவருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ரொய்டசுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த நேர்காணலில், சிறிலங்கா இராணுவத்தினால் ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஒழித்தவிடமுடியாது எனவும், விடுதலைப் புலிகள் முழு உறுதியுடனும், முழு பலத்துடனும் போராடுவார்கள் எனவும். ஒருபோதும் அவர்கள் சரணடையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தற்போது பொதுமக்கள் பலரும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வருவதாகவும், இந்த நிலையில், மக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் இந்தப்போராட்டத்தில் நிற்சயம் வெற்றி பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் எம்முடனேயே இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகளை தயார்ப்படுத்திவருவதாகவும், மக்களும் இந்த நிலையில் தமக்கு பெரும் பங்களிப்பினை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை சிறி லங்கா இராணுவத்தினர் தமிழ்மக்கள்மீது வீசி அவர்களை கொன்றுவருவதாகவும் அவர் குற்றம் சாட்டிள்ளார்.
மனிதப்பேரவலம் ஒன்றைதமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள புலித்தேவன் சர்வதேச சமுகம் தலையிட்டு நிரந்தர யுத்தம் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி இங்கு இரத்த ஆறு ஓடுவதை தடுக்க இதுவே சந்தர்ப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிவரும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒருபோதும் அவர்களை கொலை செய்ததாக சரித்திரம் இல்லை எனத் தெரிவித்துள்ள புலித்தேவன். மக்கள் தங்கள் கடும் துயரங்களுக்கும் அவலங்ககளுக்கும் மத்தியல் தமக்கு முழுமையான ஆதரவாகவே உள்ளதாகவும்.
நேற்று திங்கட்கிழமை மட்டும் சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளதுடன் 3000 வரையான மக்கள் காயமடைநதுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பொதுமக்களை தாம் பலவந்தமாக ஒருபோதும் தடுத்துவைக்கவில்லை எனத்தெரிவித்துள்ள சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், சிறி லங்கா அரசாங்கம் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்ற அப்படி ஒரு புனைகதையினை சொல்லி வருவதாகவும், மக்கள் நாளார்ந்தம் படையினரின் மிலேச்சங்களை கண்டு பயந்தவர்களாக இருப்பதாகவும். அவர்கள் இந்த இடத்தில் சுயவிருப்பிலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தம்முடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும், அதேவேளை சிறுவர்கள் யாரும் தமது படையணிகளில் இல்லை எனவும், தெரிவித்துள்ள புலித்தேவன். இனியும் காலம் தாமதிக்காமல் அப்பாவி தமிழ் மக்களின் மனிதப்பேரவலத்தை துடைக்க சர்வதேச சமுகம் இந்த விடயத்தில் தலையிட்டு நிரந்தரமான ஒரு யுத்த நிறுத்தத்திற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment