Saturday, May 2, 2009

கொழும்புக்கு செல்லவிருந்த இந்திய இராணுவ ஆயுத லாரிகளில் 5 லாரிகள் தமிழர்களால் சேதம்



Vimalkanth

ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.
ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.

அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் மதிமுக வினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment