vimalkaanth, chennai
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவிஸ் பாராளுமன்ற சதுக்கத்தின் முன்னால் சுவிற்சர்லாந்தின் அனைத்து பாகங்களிலும் இருந்து வருகை தந்து ஒன்றுகூடி நிற்கின்ற தமிழ் மக்கள் புனிதம் நிறைந்த இன்றைய நாளில் சுவிஸ் அரசாங்கத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் இன்றில்லையேல் என்றுமில்லை என்கின்ற கோசம் தாங்கி உரிமைக் குரலாய் ஒன்று கூடியுள்ளனர்.
சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சுவிஸ் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமாகவும் சுவிஸ் தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று அதன் இணை அமைப்புக்களும் ஒன்றுகூடி முன்னெடுக்கும் இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சுவிஸ் தமிழர் பேரவையின் ஆலோசகர் வன்னித்தம்பி தங்கரத்தினம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதினை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வில் சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சர்வதேச தொண்டுநிறுவன பிரதிநிதிகள் என பலர் உரையாற்ற இருக்கும் இந்த நிகழ்வில் தாயகத்தில் இருந்து வருகை தந்த நவசமாஜக் கட்சியின் கல்விக்கழக பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான ரணத் பிரேம்லால் குமாரசிங்க சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அங்கீகரிக்கக் கோரியும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கெதிராக குரல் எழுப்பி சிறிலங்கா அரசை உடனடியான யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு அழுத்தம் கொடுக்கக் கோரியும் வன்னி மக்களின் உடனடித் தேவையான உணவு மருந்து என்பவற்றை அம்மக்களுக்குச் சென்றடைவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சுவிஸ் அரசை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதேவேளை சுவிசின் பேர்ண் மாநிலம் மற்றும் ஏனைய மாநிலங்கள் உட்பட எல்லாப் பகுதிகளிலும் இன்று இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலை விளக்கி பன்மொழி துண்டுப் பிரசுரங்களை பல்லாயிரக்கணக்கில் சுவிஸ் மக்களினுடைய வீடுகளுக்குள் சுவிஸ் தமிழர் பேரவை விநியோகிக்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை அவர்களின் உரிமைப் போராட்டத்தை சுவிஸ் அரசு அங்கீகரிக்கக் கோரும் கையெழுத்துக் கோரும் மனுக்களையும் அனைவரிடமும் பெற்று சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துக்களை சேகரித்து இன்றைய ஒன்றுகூடலின் முடிவில் மகஜரும் இந்த ஒன்றுகூடலின் உரிமைப் பிரகடனமும் சுவிஸ் அரச அதிபர் மதிப்பிற்குரிய கன்ஸ் ருடொல்ப் மேர்ஸ் அவர்களிம் சுவிஸ் தமிழர் பேரவை கையளிக்க இருப்பதுவும் இந்த ஒன்றுகூடலின் சிறப்பம்சம் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment