Wednesday, March 25, 2009

சிறிலங்காவின் இன்றைய இன அழிப்புத் தாக்குதலில் 112 பேர் படுகொலை, 210 பேர் படுகாயம்


vimalkanth, chennai

வன்னியில் சிறிலங்காவின் வான் மற்றும் தரைப் படையினர் இணைந்து இன்று நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.



இப்பகுதிகளை நோக்கி இன்று 986 எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகள் ஏவப்பட்டுள்ளது. அத்துடன் மாத்தளன் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.


இதே பகுதியில் மாத்தளன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையே இப்பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகளவிலான தாக்குதல்கள் வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை மற்றும் மாத்தளன் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளன.


இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களும் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டன. இப்பகுதியில் ஐந்து தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இன்றைய தாக்குதல்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளனர்.


கொல்லப்பட்டவர்களில் இருவர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் செயலகத்தின் பணியாளர்கள். முல்லைத்தீவு அரச செயலக பதிவாளரும் அலுவலகப் பணியாளருமான 52 வயதுடைய மரியநாயகம் டெய்சி ராணி மற்றும் மாவட்ட செயலக உலக உணவுத்திட்ட நிவாரண வழங்கல் பதிவாளரான 27 வயதுடைய பரமேஸ்வரன் ஜெனோஜா ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.


No comments:

Post a Comment